இந்திய இழுவைப் படகுகள் அட்டகாசம்: பேச்சுவார்த்தைக்கு இந்தியா செல்வதற்கு உண்டியல் குலுக்கல்(Video)
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை அரசியல் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளிடம் எடுத்துக் கூறி எந்தவொரு பயனும் கிட்டாத நிலையில், பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தாங்களே களத்தில் இறங்கியுள்ளனர்.
அந்தவகையில் கடற்றொழிலாளர்களிடம் உண்டியல் மூலம் பணம் சேகரித்து, இந்தியாவிற்கு சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் மற்றும் அங்குள்ள கடற்றொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன.

சீனாவுடன் முக்கிய கலந்துரையாடல்: இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
உண்டியல் மூலம் பணம்
அந்தவகையில், இந்த உண்டியல் குலுக்கும் வேலைத்திட்டமானது நேற்றையதினம் வடமராட்சி பகுதியில் ஆரம்பமானது.
இரண்டாவது நாளான இன்றையதினம் மாதகல் பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்களிடமும் மக்களிடமும் உண்டியல் மூலம் பணம் சேகரிக்கப்பட்டது.
இதில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார், மாரீசன்கூடல் குசுமாந்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், வலி. தென்மேற்கு கடற்றொழில் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ், மாதகல் கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காணாமல்போன புத்தர் சிலையை கேட்டு அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர் : மட்டக்களப்பில் பொலிஸார் குவிப்பு





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
