சீனாவுடன் முக்கிய கலந்துரையாடல்: இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
சீன தொலைத்தொடர்பாடல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சினோபெக் நிறுவனம், BYD நிறுவனம் உள்ளிட்ட உயர்மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துயாடலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் (19.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதன்போது இலங்கையின் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் துறைமுக நகரத்தை சர்வதேச நிதி மத்தியஸ்தானமாக மாற்றியமைத்தல், துறைமுகநகரத்திற்கான புதிய சட்டதிட்டங்களை உருவாக்குதல், துறைமுக நகரத்திற்காக மட்டுப்படுத்தப்பட்ட நீதிமன்ற மற்றும் வழிக்காட்டல் முறைமைகளை உருவாக்குதல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்பு
இதேநேரம் இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பை மின்சாரத்தின் ஊடாக இயக்குதல், மின் வாகன பாகங்களை ஒழுங்கமைத்தல், மின்சார தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன புத்தர் சிலையை கேட்டு அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர் : மட்டக்களப்பில் பொலிஸார் குவிப்பு
இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முடிந்த வகையில் உயரிய பங்களிப்பை வழங்குவதாகவும், இலங்கையின் முதலீட்டு வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதாகவும் முதலீட்டாளர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
