இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5ஆவது மற்றும் இறுதி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று(2) நடைபெற்றது.
இங்கிலாந்து அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை பெற்றது.
248 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 10.3 ஓவரில் 97 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்திய அணி
இதனால் இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதுடன் டி20 தொடரை 4-1 என கைப்பற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி பெப்ரவரி 6 அன்று ஆரம்பமாகவுள்ளதுடன் இரண்டாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 9 அன்றும், மூன்றாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 12ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |