இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிராக, இந்திய அணி, பங்கேற்கும், ஐந்து டெஸ்ட் போட்டிகள், எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகின்றன.
இந்நிலையில், சில கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய அணி இந்த தொடரில் வெல்ல வாய்ப்பில்லை என்று கூறி வருகின்றனர்.
எனினும், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெத்யூ ஹைடன், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு, இங்கிலாந்து அணியை வீழ்த்துவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
மூத்த வீரர்களின் ஓய்வு
விராட் கோலி, ரோஹித் ஷர்மா, மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் அண்மையில் ஓய்வு பெற்றுள்ளனர். அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உடற்தகுதி காரணங்களால் அணியில் இடம்பெறவில்லை.
இருப்பினும், லீட்ஸ் மற்றும் மன்செஸ்டரின் சவாலான நிலைமைகளில் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால், விமர்சகர்களின் கருத்தை தவறு என நிரூபிக்க முடியும் என்று ஹைடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள், சவால் மிக்கவர்களாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



