பிரித்தானியாவில் வாகன விபத்தில் பலியான இந்திய மாணவி
பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் இந்தியா அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்த 33 வயதான சேஸ்த கோச்சார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாணவி லண்டனில் பொருளாதார கல்வி மையத்தில் உயர் கல்வியை தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், அவர் சைக்கிளில் கடந்த வாரம் தன்னுடைய வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்த போது அவர் மீது பாரவூர்தி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது, அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கணவர் விபத்துக்குள்ளான மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்த் குறித்த தகவலை இணையத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
