வெளிநாட்டில் விபத்தில் பலியான இந்திய மாணவி! பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கடந்த ஜனவரி மாதம் பொலிஸாரின் ரோந்து வாகனம் மோதியதில் இந்திய வம்சாவளி மாணவி ஜானவி கந்துலா (வயது 23) பரிதாபமாக உயிரிழந்தார்.
சவுத் லேக் யூனியனில் சாலையை கடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சியாட்டில் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன், சம்பவ இடத்தில் விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட காணொளியினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மக்களின் பாதுகாப்பு உறுதி
இதன்போது விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி , குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும்,11 ஆயிரம் டொலர்களுக்கு செக் எழுதுமாறும் சிரித்துக்கொண்டே பேசியுள்ளார்.
இந்த உரையாடல் அதிர்ச்சி அளிப்பதாகவும் இதயத்தை நொறுங்கச் செய்வதாகவும் உள்ளது என சியாட்டில் சமூக பொலிஸ் ஆணையம் (சிபிசி) தெரிவித்துள்ளது.
மக்கள் மதிக்கும் வகையில் பொலிஸார் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் சிபிசி தெரிவித்துள்ளது.
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan