இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் சென்ற இந்திய கப்பல்: அனுமதி மறுத்த ஸ்பெயின்
இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலை தனது துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ் (Jose Manuel Albares) கூறியுள்ளதாவது, டேனிஷ் கொடியுடன் கூடிய ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் இந்த கப்பல் சென்னையில் இருந்து இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது.
27 டன் வெடிபொருட்கள்
ஸ்பெயினின் தென்கிழக்கில் உள்ள கடாஜினா துறைமுகத்தில் மே 21ஆம் திகதி நின்று செல்ல அனுமதி கோரியதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், ஆனால் அதனை அங்கு நிறுத்த அனுமதி கிடைக்கவில்லை.
மத்திய கிழக்கிற்கு அதிக ஆயுதங்கள் தேவையில்லை. அங்கு அமைதி தேவை என்று அவர் கூறியதோடு, அந்தக் கப்பல் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிவிக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் ஏற்றப்பட்டிருந்ததாக ஸ்பெயின் நாட்டு செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு செல்லும் இக்கப்பல் குறித்து இந்திய வெளியுறவுத் துறையிலிருந்தும் தெளிவான பதில் எதையும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |