இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள்! இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பு
கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் முழுமையான நிதியுதவியுடன் கூடிய 200 புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை பல்வேறு மட்டங்களிலும் உள்ள இலங்கைப் பிரஜைகளிடம் கோரியுள்ளது.
இந்த புலமைப்பரிசில் திட்டம் மூலமாக இந்தியாவின் மிகவும் பிரபலமான, மதிப்புமிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இப்புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம், பாராமெடிக்கல், ஃபேஷன் டிசைன் மற்றும் சட்டம் ஆகிய துறைகள் உள்ளடக்கப்படவில்லை.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தகவல்
இலங்கை பிரஜைகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக வழங்கப்படும் 2023-2024 கல்வி ஆண்டுக்கான புலமைப்பரிசில்கள், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் வழங்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் www.mohe.gov.lk. என்ற இணையத்தளத்தின் முலம் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் தேர்வு நடைமுறைகள் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பு அல்லது கல்வி அமைச்சு என்பவற்றை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.