யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மாணவர்களின் கற்றலுக்கு நிதி ஆதாரத்தினை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிலினை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.
8 ஆயிரம் ரூபா
இதன்போது அவர், முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கான புலமைப்பரிசிலினை வழங்கிவைத்தார்.

மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபா வீதம் அவர்களின் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தொகை வழங்கப்படவுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக பதில் துணை வேந்தரும் கலைப்பீட பீடாபதியுமான நாகமுத்து பிரதீபராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்.இந்நிய துணை தூதுவர் சிறீ சாய் முரளி, விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
You may like this..











பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan