ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிரோடுதான் இருக்கிறார்:
அமெரிக்கா ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) உயிரோடுதான் இருக்கிறார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. மொஜ்தபா அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளில் "அதிகளவில் ஈடுபட்டு வருகிறார் என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் சபையில் சாட்சியமளித்தபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

அந்தத் தாக்குதலில் அவரது மகனான மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நாட்டின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார்.
தாக்குதலுக்குப் பிறகு மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றவோ அல்லது நேரடியாகப் பேசவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊடகங்களில் அவரது பெயரில் வெளியாகும் எழுதப்பட்ட செய்திகள் மற்றும் இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே அவரது தொடர்புகள் இருந்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அவரைக் குறிவைத்து படுகொலை செய்யக்கூடும் என்ற பாதுகாப்பு அச்சமே அவர் பொதுவெளியில் வராமல் இருப்பதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்றக் குழுவிடம் பேசிய மார்கோ ரூபியோ பின்வருமாறு குறிப்பிட்டார்: அந்நாட்டின் அரசியல் கட்டமைப்பில் பல தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். எனவே, தற்போதைய சூழலில் பொதுவெளியில் தோன்றுவது அவர்களுக்குள்ளேயே பரிந்துரைக்கப்பட வாய்ப்பில்லை என ரூபியோ தெரிவித்துள்ளார்.
எனினும், மொஜ்தபா கமேனி தொடர்ந்து சில மட்டங்களில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதற்கான அறிகுறிகள் நமக்குக் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்து வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மற்றும் அணுசக்தி திட்ட விவகாரங்களில், மொஜ்தபா கமேனி பின்னணியில் இருந்து முக்கிய முடிவுகளை எடுத்து வருவதாக அமெரிக்கத் தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri