பிரித்தானியாவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை வழங்கிய உணவகம்: அபராதம் விதித்த அதிகாரிகள்
பிரித்தானியாவில், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை கொடுத்த இந்திய உணவகம் ஒன்றிற்கு புலம்பெயர்தல் அதிகாரிகள் பெருந்தொகை அபராதம் விதித்துள்ளனர்.
இங்கிலாந்தின் பிரிஸ்டலுக்கு அருகிலுள்ள ( Nailsea) என்னுமிடத்தில் அமைந்துள்ள ( Posh Spice )என்னும் இந்திய உணவகத்தில் நேற்றைய முன்தினம் (20.09.2023) புலம்பெயர்தல் அதிகாரிகள் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது உணவகத்தில் புலம்பெயர்தல் அதிகாரிகளைக் கண்ட சிலர் தப்பிச்செல்ல முயற்சித்ததைடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர்களில் இருவர் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அவர்கள் இருவரும் நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் அபராதம் விதித்த அதிகாரிகள்
மேலும், இந்த உணவகத்தில் கடந்த 15 மாதங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இது மூன்றாவது முறை எனவும் தெரியவந்துள்ளது.
இந்த பரிசோதனையின் போது, உணவக உரிமையாளருக்கு 40,000 பவுண்டுகளும், இரண்டாவது முறை 60,000 பவுண்டுகளும் அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது அவர் மீண்டும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பணிக்கு வைத்து சிக்கியுள்ளதால், மீண்டும் அவர் அபராதம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
