மட்டக்களப்பிற்கு 50 ஆயிரம் இந்திய நிவாரண பொதிகள் ஒதுக்கீடு
இந்தியா அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய நிவாரணப் பொதிகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரனை இன்று தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களை இணையவழியில் சந்திப்பு நடத்திய உயர் அதிகாரிகள் மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களின் புள்ளிவிபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், மாவட்டத்திற்கான உலர் உணவு பொதிகளின் எண்ணிக்கை கேட்டறிந்ததுடன் அனைவுரக்கும் வழங்க வேண்டும் என அரசாங்கம் திட்டமாக இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 84 ஆயிரம் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா 10 கிலோ நிறை கொண்ட 50 ஆயிரம் நிவாரண பொதிகள்
கிடைக்கவுள்ளதுடன், அதனை வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பம்
ஒன்றிற்கு தலா ஒரு பொதிகள் வீதம் வழங்கவுள்ளதுடன் அதன் பின்னர் வரும் நிவாரணப் பொதி
ஏனையவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri