தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி! பொலிஸார் குவிப்பு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை காலை வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த பரிசோதனை முடிவுகளின் பின்னர் அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகின்றது.
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ள போரூர் மருத்துவமனை முழுவதும் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நயன் வீட்டில் மட்டுமல்ல செல்வராகவன் வீட்டிலும் விசேஷம்! கோயிலில் இருந்து வெளியான புகைப்படம் Manithan
