பிரதமர் மோடியின் விஜயம்: இந்திய பாதுகாப்பு துறையின் விசேட குழு இலங்கையில்..!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக, இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன், இணைந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, இந்தியாவிலிருந்து ஒரு மேம்பட்ட பாதுகாப்பு குழு கொழும்புக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி 2025 ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் வருகையின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்புடன், போக்குவரத்து திட்டமும் செயற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அதிகாரிகள்
இந்தியப் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் பிற மூத்த இந்திய அதிகாரிகள் இலங்கை வருகின்றனர்.
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் கொழும்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன், மோடி அனுராதபுரத்திற்கு சென்று, புனித ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு நடத்தவும், இந்திய அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்
இந்த நிலையில், மேல் மாகாண மூத்த பொலிஸ் அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, மோடி கொழும்புக்கு வருகை தரும் போதும், புறப்படும் போதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவார், அத்துடன் ஏற்கனவே கொழும்பில் உள்ள ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் இந்திய பாதுகாப்புக் குழுவுடன், பாதுகாப்பு திட்டத்தை அவர் ஒருங்கிணைப்பார்.
மோடியும் அவரது குழுவினரும் விமான நிலையத்திற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும்போதும், கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் உள்ள பிற உயர் மட்ட இயக்கங்களின் போதும் பல வீதிகள் அவ்வப்போது மூடப்படும்.
கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்காக ஒரு பெரிய அளவிலான பொலிஸ் மற்றும் சிறப்புப் படையினர் கடமைகளில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கபட்டுள்ளது
you may like this

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
