போர் பதற்றத்தின் மத்தியில் உக்ரைன் சென்ற மோடி அளித்த பரிசு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனுக்கு, போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவைகளை விரைவாக ஏற்படுத்துவதற்காக நான்கு மொபைல் மருத்துவமனை யூனிட்களை (Mobile Hospital Units) பரிசாக வழங்கியுள்ளார்.
குறித்த யூனிட்கள், "BHISHM" எனப்படும் (Bharat Health Initiative for Sahyog Hita & Maitri) கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவையான மருந்துகள்
இந்த மொபைல் மருத்துவமனைகள், எந்த இடத்திலும் 10 நிமிடங்களில் செயல்படக்கூடிய மருத்துவ அமைப்புகளை உருவாக்க உதவுகின்றன.
இதில் 200-க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவை முக்கிய மருத்துவ உதவிகளை வழங்குவதில் உக்ரைனுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த யூனிட்களை வழங்குவதன் மூலம் இந்தியா, உலகளவில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் உறுதியாக உள்ளது என்பதை பிரதமர் மோடி இந்த நடவடிக்கையால் மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 30 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
