இந்திய பிரதம நீதியரசர் மீது நடந்தப்பட்ட பாதணி தாக்குதல்
இந்திய பிரதம நீதியசர் கவாய் மீது நடந்தப்பட்ட பாதணி தாக்குதலை, இந்திய பிரதமர் கண்டித்துள்ளார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் நேற்று(6) இடம்பெற்றுள்ளது.
பாதணி தாக்குதல்
இந்த நிலையில், குறித்த சம்பவம் "ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது" என்று பிரதமர் மோடி கூறினார்.
Spoke to Chief Justice of India, Justice BR Gavai Ji. The attack on him earlier today in the Supreme Court premises has angered every Indian. There is no place for such reprehensible acts in our society. It is utterly condemnable.
— Narendra Modi (@narendramodi) October 6, 2025
I appreciated the calm displayed by Justice…
நீதிமன்ற நடவடிக்கையின் போது, சட்டத்தரணி ஒருவரே பிரதம நீதியரசர் மீது பாதணியை வீசினார்.
இதனை அடுத்து அவர், பாதுகாப்புப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் சம்பவத்தின் போதும் அதற்குப் பிறகும் பிரதம நீதியரசர் கவாய் எந்தவித அச்சமும் இல்லாமல் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரில் கண்ட சாட்சி
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, பிரதம நீதியரசர் இந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களை கூறினார் என்று குற்றம் சுமத்தியே, சட்டத்தரணி, இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று சத்தமிட்டப்படி, அவர் தமது பாதணியை கழற்றி பிரதம நீதியரசரை நோக்கி வீசியுள்ளார்.
இந்த நிலையில் தம்மீது தாக்குதல் நடத்திய சட்டத்தரணி கிஷோரை எச்சரித்து விடுவிக்குமாறு தலைமை நீதிபதி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை குறித்த சட்டத்தரணி சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக, இந்திய சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
