கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரையை நிறுத்தியுள்ள அமெரிக்காவின் தடுப்பு மையம்..!
கோவிட்-19 தடுப்பூசிகளை அனைவருக்கும் பரிந்துரை செய்வதை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) நிறுத்தியுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் முடிவை தனிப்பட்ட நபர்களிடமே விட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தடுப்பூசி பரிந்துரை
இதுவரை 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் வருடாந்தம் கோவிட்-19 ஊக்குவிப்பு ஊசி (Boosters) அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரைத்து வந்தது.
எனினும், இனிமேல், எல்லோரும் சுயமாக முடிவெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைவரும், தடுப்பூசி செலுத்துவது குறித்து தங்களது மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.




