தொடர் வெற்றிகளை பெற்ற யூ சுசாகிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய வீராங்கனை
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று நேற்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற இந்தியாவின் வினேஷ் போகத் (Vinesh Phogat), ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டார்.
இதில் 3-2 என்ற செட் கணக்கில் வினேஷ் போகத் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
முதல்தர வீராங்கனை
தொடர்ந்து மாலையில் நடைபெற்ற காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்திய வினேஷ் போகத் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில், இதுவரை சர்வதேச போட்டிகளில் யாராலும் தோற்கடிக்கப்படாத முதல்தர வீராங்கனையான ஜப்பானின் யூ சுசாகியை முதன்முதலாக தோற்கடித்த பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.
யூ சுசாகி இதுவரை தான் விளையாடிய 82 சர்வதேச போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றவர் என்பதுடன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் 4 முறை உலக சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |