முன்னணி கிரிக்கெட் தொடரொன்றில் களமிறங்க தயாராகும் தினேஷ் கார்த்திக்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தென் ஆப்பிரிக்க சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.
இதன் மூலம் குறித்த தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார்..
இவர் இந்த தொடரின் பார்ல் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக்
அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி தென் ஆப்பிரிக்க சுப்பர் லீக் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக் அதன்பிறகு முதல் முறையாக இந்த தொடரில் விளையாடவுள்ளார்.
இந்திய அணிக்காக 180 போட்டிகளில் விளையாடி இருக்கும் தினேஷ் கார்த்திக், கடைசியாக ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.
அதன்பிறகு இவர் பெங்களூரு அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri