இலங்கையர்களுக்கு இந்திய கடவுச்சீட்டு:விசாரணைகளை ஆரம்பித்துள்ள தமிழக கியூ பிரிவு பொலிஸார்
இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட தமிழக பொலிஸார், இந்திய குடிவரவு மற்றும் குடியகல்வு பணியகத்தின் அதிகாரிகள் உட்பட 41 பேர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நபர்கள் சம்பந்தமான இறுதி அறிக்கை துரிதமாக இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கியூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
இலங்கையர்கள், வெளிநாடு செல்ல, இந்திய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழக கியூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள், இந்திய குடிவரவு மற்றும் குடியகல்வு பணியகத்தின் 14 அதிகாரிகள், இந்திய தபால் திணைக்களத்தின் 2 அதிகாரிகள் உட்பட 41 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டு விநியோகிப்பு
இது தொடர்பாக ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு இலங்கை தமிழர்கள், 11 சுற்றுலா முகவர்கள் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
இந்தியாவில் இருந்து ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முகவர்கள் ஊடாக பணத்தை பெற்றுக்கொண்டு இலங்கையர்களுக்கு இவ்வாறு கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 14 மணி நேரம் முன்

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன? Cineulagam

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri
