குற்வாளிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப கடவுச்சீட்டு தயாரிக்கும் இலங்கையர்கள்
போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயார் செய்யும் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 9 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து இலங்கையர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெங்களூர் பசவனகுடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, அதிரடி நடவடிக்கைக்கு பின் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பல வருடங்களாக போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்திய பிரஜைகள் என போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி சுமார் ஐம்பது பேர் இவ்வாறு வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரித்து பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்ப்பபட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பலர் கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்திய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
