கனடாவில் இந்திய வம்சாவளி பெண் மீது கடும் தாக்குதல்
கனடாவின் கால்கரியில் உள்ள பரபரப்பான தொடருந்து நிலையம் ஒன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இக்காணொளியில் குறித்த பெண் தாக்கப்படும் போது சுற்றி இருப்பவர்கள் எவ்வித எதிர்வினையும் காண்பிக்காத நிலையில் இது இந்திய தரப்புகளில் பெரும் இனவாத கருத்துக்களை தூண்டி விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது தொடர்புடைய காணொளியானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன் பரவலான சீற்றத்தையும் இனவெறி குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.
இன ரீதியான தாக்குதல்
தாக்குதல் நடத்திய நபர், பிரெய்டன் ஜோசப் ஜேம்ஸ் பிரெஞ்ச் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், அந்தப் பெண்ணின் ஆடையை பிடித்து, மீண்டும் மீண்டும் குலுக்குவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
cAfter all the racism indians have been facing on the internet now have transformed into literal hate crimes against indians in real life too and this includes indian women also so instead of fighting on twitter we should be united against hate crimes
— ŠƆŰMØ⚜️🔱 (@Soumo75200) March 24, 2025
📍Alberta,Canada pic.twitter.com/K5vtAvN5qi
பின்னர் அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தண்ணீர் போத்தலை எடுத்து, அவர் முகத்தில் தண்ணீரை தெளித்துள்ளதுடன் சுவற்றின் மீது அவரை மோத வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். பலர் இச்சம்பவத்தை நேரில் பார்த்தும், எவரும் உதவிக்கு முன்வரவில்லை.
அத்துடன், சுமார் 30 நிமிடங்களில் தாக்குதலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழிப்பறிக்கு முயன்றதாக மட்டுமே தற்போது அந்த நபர் மீது வழக்கு பதிந்துள்ளதாகவும், இன ரீதியான தாக்குதல் நடந்துள்ளதா என்பது தொடர்பில் உரிய அமைப்பு விசாரணைகளை மேற்ககொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
