அமெரிக்க விமானப்படையில் இந்திய வம்சாவளி விண்வெளி வீரருக்கு முக்கிய பதவி
பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீரர் ராஜா சாரியை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார்.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் 'க்ரூ-3' என்ற நாசாவின் விண்வெளி திட்டத்திற்கு தலைவராக 45 வயதான ராஜா சாரி பதவி வகித்து வரும் நிலையில் இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமெரிக்க விமானப்படையில் கர்னலாக இருந்த இவர் 461-வது விமானப்படை குழுவின் கட்டளை அதிகாரியாகயும், அமெரிக்காவின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான எப் 35-ன் ஒருங்கிணைந்த பரிசோதனைப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
ராஜா சாரி நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணிக்கும் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்வாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri