காசா யுத்தம் சர்வதேச கடல் பாதுகாப்பில் கடும் தாக்கம்: ரணில் எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன யுத்தமானது, சர்வதேச ரீதியான கடல் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளுடனான இலங்கையின் அணுகுமுறை மிக முக்கியமானது என்பதையும் ரணில் விக்ரமசிங்க எடுத்துரைத்துள்ளார்.
தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (28.02.2024) இடம்பெற்ற இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அணுகுமுறையின் அவசியம்
இந்து சமுத்திரத்தில் நிலவும் அதிகாரப் போட்டிக்கு மத்தியில் இலங்கையின் சுதந்திரத்தை நிலைநிறுத்துவது அவசியம் ஆகும்.
சுயஸ் கால்வாயில் 1967ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறு வருட யுத்தத்தின் பாதிப்பு கொழும்பு துறைமுகத்தில் சுமார் 10 வருடகாலமாக நீடித்திருந்தது.
அதுபோல, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன யுத்தமானது, சர்வதேச ரீதியான கடல் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, மத்திய கிழக்கு நாடுகள் முதல் இந்தோனேசியா வரையான நாடுகளுடனான அணுகுமுறை மிக முக்கியமானது என்பதையும் ரணில் விக்ரமசிங்க எடுத்துரைத்துள்ளார்.
இந்து சமுத்திரத்தின் எதிர்காலம்
அத்துடன், இந்து சமுத்திரத்தின் எதிர்காலமானது, இலங்கையின் பங்கு மற்றும் இந்தோ - பசிபிக் உறவிலும் தங்கியுள்ளது என நான் நம்புகின்றேன்.
மேலும், இந்தியா முதல் ஆபிரிக்கா வரையிலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மையப்புள்ளியாக இலங்கை செயற்படும் என்ற இலக்கும் எமக்கு உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
