இலங்கை வரவுள்ள இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல்
இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை மூன்று நாள் பயணமாக. நாளை 26ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட, உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட கப்பல்களில் மூன்றாவது கப்பலே, ஐஎன்எஸ் மும்பை ஆகும்.
இந்தக் கப்பல், மும்பையில் உள்ள மசாகன் டாக் லிமிடெட்டில் கட்டப்பட்டது என்று இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படை
இந்தக்கப்பல், தமது இடைக்கால மேம்படுத்தலை முடித்து, 2023 டிசம்பர் 08 ஆம் திகதியன்று, விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கட்டளையில் சேர்க்கப்பட்டது
இந்தநிலையில் ஐஎன்எஸ் மும்பை, முதல் தடவையாக, இலங்கையில் உள்ள துறைமுகம் ஒன்றுக்கு வருகை தருகிறது. அதேநேரம் இந்த ஆண்டுக்குள் இந்திய கப்பல்களின் இலங்கைக்கான எட்டாவது துறைமுக அழைப்பாக இந்த பயணம் அமைகிறது.
முன்னதாக இந்திய கடலோர காவல்படையின் சமர்த், அபினவ் மற்றும் சாசெட் ஆகிய கப்பல்களுக்கு கூடுதலாக ஐஎன்எஸ் கப்ரா, கரஞ்ச், கமோர்டா மற்றும் சல்கி ஆகியவை இந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளன.
ஐஎன்எஸ் மும்பை இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் டோர்னியர் கடல் கண்காணிப்பு விமானத்திற்கான அத்தியாவசிய உதிரிப்பாகங்களை எடுத்து வருகிறது.
இதேவேளை ஐஎன்எஸ் மும்பை, ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று இலங்கையில் இருந்து புறப்படும் என்று இ;ந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.