ரணிலோடு கைகோர்க்க தயாராகும் சஜித்தின் மேலும் பல ஆதரவாளர்கள்
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 14 பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகியுள்ளதாகவும், அதில் 11 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக இணையவுள்ளதாகவும் ஜனாதிபதியின் தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (24.08.2024) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தலதா அத்துகோரளவும் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் விரைவில் தமது கட்சியில் இணைய உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க
அதனால் எதிர்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி இன்னும் பலர் திரளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து கணக்கெடுப்பு அறிக்கைகளிலும் ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தை அடைந்துள்ளார்.
ஆரம்பத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த ரணில் விக்ரமசிங்க தற்போது தனது பிரசார வேலைத்திட்டத்தின் மூலம் முதலாம் இடத்தை அடைய முடிந்துள்ளது என ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 43 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
