கடலில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை மாயம்
காலி பெந்தொட்டை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெந்தொட்டை கடற்கரையில் நேற்று(13.08.2026) பிற்பகல் நீராடிக் கொண்டிருந்தபோதே அவர் எதிர்பாராத விதமாக கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இவர் 24 வயதுடைய இந்திய பிரஜை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர் தேடுதல் நடவடிக்கை
காணாமல் போயுள்ள நபர் தனது நண்பர் ஒருவருடன் பெந்தொட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளதுடன், குறித்த ஹோட்டலின் பின்னால் உள்ள கடற்கரையில் அவர் நீராடிக்கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமல்போயுள்ள நபரை மீட்பதற்காக பொலிஸார் கடற்படையினரின் உதவியுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.