தென்னிலங்கையில் இந்தியப் பிரஜை நீரில் மூழ்கி பலி
தென்னிலங்கையில் கடலில் நீராடச் சென்ற இந்தியப் பிரஜையொருவர் , நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
காலி - ஹிக்கடுவை, தொடந்துவ பகுதியில் நேற்று புதன்கிழமை (25.12.2024) மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 57 வயதான இந்திய பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தியப் பிரஜை
நேற்று மாலை குறித்த இந்தியப் பிரஜை தனது மகள், மகன் மற்றும் மற்றுமொரு நபருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
அதன் போது அவர் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, பிரதேசவாசிகள் குறித்த நபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் குறித்த இந்தியப் பிரஜை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |