அர்ச்சுனாவை அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எச்சரித்த பனை அபிவிருத்தி சபையின் தலைவர்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பனை அபிவிருத்தி சபையின் தலைவரினால் முறையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி சபையில் கருத்து தெரிவிக்குமாறும் அர்ச்சுனாவுக்கு கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்தர்பத்தில் குறிக்கிட்ட அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையே கருத்து மோதல்களும் ஏற்பட்டிருந்தது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar), வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைத் தலைமையில் இன்று(26.12.2024) குறித்த கூட்டம் ஆரம்பமானது.
இராணுவத்தினர் வசமுள்ள காணிகள்
இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீதரன், இராமநாதன் அர்ச்சுனா, ரஜீவன், இளங்குமரன், பவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது இராணுவத்தினர் வசமுள்ள காணிகள், மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான சாலைகள், சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
