கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகளவான குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தினுடாகச் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று பயணிகள் வருகை முனையத்தின் ஊடக வெளியேற முற்பட்ட சந்தேகத்துக்கிடமான பயணி ஒருவரைச் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது அந்த நபரின் பயணப் பொதியினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ 750 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கைதான நபர் 24 வயதுடைய இந்தியப் பிரஜை என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விமான நிலையப் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam