பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த இந்தியருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
பிரித்தானியாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியரொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட அனில் கில் வயது 47( கணவன்) ,ரஞ்சித் கில் வயது 43 (மனைவி) ஆகியோர் இங்கிலாந்தில் ஷரி மாகாணத்தில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மனைவியின் நடத்தை தொடர்பில் கணவன்,மனைவிக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவியை அனில் கில் 18 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.இதன்போது , மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அருகிலுள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளதுடன்,சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய,சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam