இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர்
பாகிஸ்தானில் (Pakistan) இருந்து போதைப்பொருள் கடத்துவதற்கான திட்டத்தில் ஈடுபட்ட நபர் தமிழகத்தை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில், இந்திய குஜராத் கடற்கரையில் 'அல் ரஸா' எனப்படும் படகு 14 பாகிஸ்தானியர்களுடன் கைப்பற்றப்பட்டது.
இதன்போது, படகில் இருந்து இலங்கை ரூபாவின் பெறுமதியில் சுமார் 2000 கோடி ரூபாய் மதிக்கத்தக்க 86 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறைச்சாலை
இந்நிலையில், குறித்த ஹெரோயின் போதைப்பொருளினை இலங்கைக்கு எடுத்துச் செல்வதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
எனினும், போதைப்பொருளை கடலில் இருந்து பெறவுள்ள நபர் குறித்து எந்த தகவலையும் அவர்கள் வழங்கியிருக்கவில்லை.
இதனை தொடர்ந்து, விசாரணைகளின் அடிப்படையில் இலங்கையின் சிறையில் நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த நபரே இந்தப் போதைப்பொருள் கடத்தலுக்கு திட்டமிட்டார் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த நபர் மீதான விசாரணைகளை முன்னெடுக்க இந்திய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |