வாக்களிப்பு எண்ணிக்கையில் சாதனை புரிந்த இந்தியா : உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னும் 20 மணித்தியாலங்களில்
இந்திய மக்களவை தேர்தலில் 642 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் உலக சாதனையை இந்தியா உருவாக்கியுள்ளது என்று இந்திய தேர்தல்கள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024இன் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களி;ன் எண்ணிக்கை 968 மில்லியன்களாகும் இதில் 642 மில்லியன் வாக்களித்தமை என்பது, அனைத்து G7 நாடுகளின வாக்காளர்களை காட்டிலும்; 1.5 மடங்கு வாக்காளர்களாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளை காட்டிலும் 2.5 மடங்கு வாக்காளர்களாகும் என்றும் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றி பெற்ற விதம் குறித்து கருத்துரைத்துள்ள இந்திய தேர்தல்கள் ஆணையர், வாக்குப்பதிவுகளின்போது 1.5 கோடி பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
முடிவுகள் நாளைய தினம்
68763 கண்காணிப்புக் குழுக்கள் பணிபுரிந்தன, 135 சிறப்பு தொடருந்துகள்; இயக்கப்பட்டன, 1692 விமானங்கள் சேவையில் ஈடுபட்டன. 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த நான்கு தசாப்தங்களில் ஜம்மு மற்றும் காஸ்மீரில் பதிவான வாக்குப்பதிவு மிக அதிகமாக இருந்தது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மக்களவை தேர்தலின் வாக்குகள் நாளைய தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |