உக்ரைன் தாக்குதல் களத்தில் இந்திய இளைஞன் பலி
உக்ரைன் - ரஷ்யா போர் களமுனையில் இந்திய இளைஞர் ஒருவர் உயிரிந்துள்ள சம்பவமானது பெரும் அதிருப்தி நிலைகளை தோற்றுவித்துள்ளது.
உக்ரைனுக்கும் எதிராக போர் நடந்து வரும் நிலையில், இந்தியர்கள் பலரும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவின், கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த பினில் (வயது 32) என்ற இளைஞர் யுத்த களத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Our response to media queries regarding death of an Indian national in Russia:https://t.co/pkC6jXkRin pic.twitter.com/2q6PELLHPl
— Randhir Jaiswal (@MEAIndia) January 14, 2025
இந்திய வெளியுறவுத்துறை
மற்றொரு இந்தியரான ஜெயின் என்பவர் காயம் அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறுகையில், 'ரஷ்ய அரசிடம் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து செல்வோம்' என தெரிவித்துள்ளது.
இராணுவத்திற்கு உதவியாளர் என்ற பெயரில் இந்தியர்களை பணியில் அமர்த்தி மோசடி நடைபெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
இதன்படி ரஷ்யாவில் சிக்கிய பலரை இந்தியா விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது.
எனினும், இந்தியர்கள் சிலர் ரஷ்யாவில் இன்னும் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |