தென் கொரிய ஜனாதிபதி அதிரடி கைது
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சியோலில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இராணுவச் சட்டம் நடைமுறை
கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும், நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது செய்வதற்காக புலனாய்வாளர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தற்போது அவர் கைது செய்யப்படும்போது, அவரது இல்லத்தின் முன்னால் மிக அதிகளவான ஆதரவாளர்கள் கூடி எதிர்ப்பு வெளியிட்டதாகவும், அதனையும் மீறி அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri