துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்கள்
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வோரின் கவனக்குறைவு காரணமாக துறைமுகத்தில் ஏராளமான கொள்கலன்கள் தேங்கிக்கிடப்பதாக தெரிய வந்துள்ளது.
துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை துரித கதியில் விடுவிப்பதற்கான செயற்பாடுகளை இலங்கைச் சுங்கத்திணைக்களம் நேற்றுமுன்தினம் தொடக்கம் ஆரம்பித்துள்ளது.
அரசாங்க விடுமுறை தினமான நேற்றைய தினமும் சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கொள்கலன்களை பரிசோதித்து விடுவிப்பது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
கொள்கலன்கள்
அதன் பிரகாரம் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 459 கொள்கலன்களும், கிரே லைன் களஞ்சியத்தில் இருந்து 242 கொள்கலன்களும் பரிசோதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சுங்கத்திணைக்களத்தினால் பரிசோதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 603 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக தெரிய வந்துள்ளது.
இறக்குமதியாளர்களோ, அவர்களின் முகவர்களோ இதுவரை அவற்றை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் துறைமுகத்தின் களஞ்சிய வசதியில் பெருமளவு இடத்தைப் பிடித்துக் கொண்டு குறித்த கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |