மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் திடீர் விஜயம் (Photos)

Mannar Hospitals in Sri Lanka India
By Ashik Nov 29, 2023 02:35 PM GMT
Report

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்

சேவைக்காலத்தை முடித்து இலங்கையில் இருந்து வெளியேற உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் புதன்கிழமை (29) மதியம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

பிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மாவட்ட பொது வைத்தியசாலையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் புஸ்பகாந்தன் ஆகியோரை சந்தித்து வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து கலந்துரையாடியூள்ளார்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் திடீர் விஜயம் (Photos) | Indian High Commissioner Visit To Mannar Hospital

நிதி உதவி

இதன் போது பிரதி அமைச்சர் காதர் மஸ்தானும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் புஸ்பகாந்தன் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள்,தேவைகள் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நீண்ட கால தேவையாக உள்ள விபத்து மற்றும் அவசர பிரிவு நிர்மாணிப்பதற்கான நிதி உதவி, CT ஸ்கேன் இயந்திரம் பெற்றுக்கொள்வதற்கான நிதி உதவி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் திடீர் விஜயம் (Photos) | Indian High Commissioner Visit To Mannar Hospital

சுகாதார சேவைகள் 

குறித்த விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் மிகவும் சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்தியசாலையின் பணியாளர்கள்,உத்தியோகத்தர்கள் மிகவும் குறைந்த அளவில் இருக்கின்ற போதும் நிறைவான சேவையை மக்களுக்கு வழங்குவதை யொட்டி தான் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்

புத்தகப்பை வழங்கும் நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புத்தகப்பையினை வழங்கி வைத்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் திடீர் விஜயம் (Photos) | Indian High Commissioner Visit To Mannar Hospital

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு இன்று (29.11.2023) மதியம் மன்னார் முருங்கன் தேசிய பாடசாலையில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது

இதன் போது மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக 250 மாணவர்களுக்கு குறித்த புத்தகப் பை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US