பிரித்தானியாவில் பரவி வரும் இந்திய கோவிட் திரிபு! - விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
பிரித்தானியாவில் இந்திய திரிபு கோவிட் மிக தீவிரமாக பரவி வருவதால், அங்கிருந்து பிரான்சுக்கு வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பரவி வருகின்ற இந்தியத் திரிபு வைரஸ் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரான்ஸில் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் அறிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகள் பற்றிய விளக்கங்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,ஜேர்மனியும் இங்கிலாந்து பயணிகளுக்கு இது போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதுடன்,அதனைத் தொடர்ந்து பிரான்ஸின் தீர்மானமும் வெளியாகி இருக்கிறது.
பிறேசில், இந்தியா, இலங்கை, துருக்கி உட்பட 16 நாடுகளின் பயணிகளுக்கு பிரான்ஸில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.
இந்நிலையில்,தனிமைப்படுத்தப்படுவோர் தங்கியிருக்கின்ற இடங்களை காவல்துறையினர் கண்காணித்து வருவர். மீறி நடப்போர் 1000
முதல் 1500 யூரோ வரை அபராதத் தொகை செலுத்த நேரிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.