சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவி - எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

India Central Province Weather Hatton
By Malaivanjan Aug 12, 2026 05:11 AM GMT
Report

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (11) செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

அண்மையில் மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவி - எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Indian Government Help By Inclement Weather 

இதற்கமைய, கடந்த வாரம் கண்டியிலுள்ள இந்திய உதவித்தூதரகத்தின் உதவித்தூதுவர் சரண்யா அம்மையாரை, பிரதேச சபை செயலாளர் விஜயசுந்தரம் மற்றும் உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோருடன் சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கொட்டகலை பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 700 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மடிக்கணினிகள் மற்றும் புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கும், இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் உதவிகளை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இந்த உதவிகளை வழங்குவதற்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய உதவித் தூதரகத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதேச சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டகலை பிரதேசத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 88 விசேட தேவையுடைய மாணவர்களுக்காக, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து, அவற்றை மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் புதிய கட்டட நிர்மாண பணிகள் 

இதேவேளை, கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தின் பயன்பாடு தொடர்பிலும் புதிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, உள்ளூர் விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு நாளுக்கான மைதான வாடகையாக 10 ஆயிரம் ரூபாயும், வைப்புப் பணமாக மேலும் 10 ஆயிரம் ரூபாயும் அறவிடப்படவுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவி - எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Indian Government Help By Inclement Weather 

பிரதேசத்திற்கு வெளியேயுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு நாளுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 10 ஆயிரம் ரூபாய் வைப்புப் பணமும் அறவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் நிகழ்வுகளுக்கு மைதானத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மைதானத்தைப் பயன்படுத்துவோரின் வசதிக்காக மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவி - எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Indian Government Help By Inclement Weather

அத்துடன், கொட்டகலை பிரதேச சபைக்குச் சொந்தமான புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்காக மத்திய மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் ராஜமணி பிரசாந்த் கூறியுள்ளார்.

உறுப்பினர் சுதர்ஷன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, வட்டகொடை நகரில் யுவுஆ இயந்திர சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிரபல வங்கிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் அவரவர் வட்டாரங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை விரைவாக நிறைவு செய்து, அவற்றின் முழுமையான விபரங்களை நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறும் பிரதேச சபைத் தலைவர் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒதுக்கப்பட்ட நிதி மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் செல்லாத வகையில், அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான கல்வி வசதிகள், விளையாட்டு மைதான அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கொட்டகலை பிரதேச சபையின் இன்றைய அமர்வில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான யோஷித ராஜபக்ச

சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான யோஷித ராஜபக்ச

 

குருவிட்ட சிறைச்சாலையில் வெடித்த கலவரம்! உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

குருவிட்ட சிறைச்சாலையில் வெடித்த கலவரம்! உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

 

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US