இலங்கை வரும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு
1987 இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை ஒழிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கை பயணம் முக்கியம் பெறுவதாக தமிழக செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது.
இலங்கையின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ் நாட்டிலும் எதிர்ப்பு எழுந்துள்ளமையை தமிழக செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஜெய்சங்கர் இலங்கை செல்வது முக்கியத்துவம் பெறுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சரக்கு பெட்டக முனையத்தில் இந்தியாவுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படும் திட்டத்துக்குத் துறைமுக வர்த்தக சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த பின்னணியிலும் ஜெய்சங்கர் பயணம் கவனிக்கப்படுவதாகத் தமிழக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இன்று இலங்கை வரும் ஜெய்சங்கர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளார்.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri