தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

Tamils Dr. S. Jaishankar Sri Lanka India
By Laksi Dec 23, 2025 02:16 PM GMT
Report

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை இன்று (23.12.2025) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது.

அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்

மீள் கட்டுமானம்

குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல் | Indian Fm Jaishankar Meets Tamil Political Leaders

இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், சிறீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாகாண சபைத் தேர்தல்

இதேவேளை,  ஜெய்சங்கரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் விரைந்து நடத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தும்படி ஒரே குரலில் அவரிடம் வலியுறுத்தினர் எனத் தெரியவந்துள்ளது.

தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல் | Indian Fm Jaishankar Meets Tamil Political Leaders

சந்திப்பில் பங்குபற்றிய எல்லோருமே கருத்துக்களை வெளியிட்டனர். பெரும்பாலும் அனைவரும் மாகாண சபைத் தேர்தலை இனியும் இழுத்தடிக்காமல் விரைந்து நடத்தும்படி வலியுறுத்தினர். மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அரசின் நிலைப்பாடு, கருத்து வெளிப்பாடுகள், நாட்டில் உள்ள நிலைமை ஆகியவை குறித்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் உன்னிப்பாகச் செவிமடுத்தார்.

ஒற்றையாட்சியின் கீழ் இறுதித் தீர்வு சரிவராது என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.

சமஷ்டி கட்டமைப்பு

அதுவே தங்களின் நிலைப்பாடு என்று தெரிவித்த சுமந்திரன், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கட்டாயம், ஆனால் அந்த சமஷ்டி கட்டமைப்பு அதில் இருக்க வேண்டுமே தவிர, பெயரை நாங்கள் வற்புறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். மாகாண சபை முறைமை இனப் பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆயினும் இன்றைய நிலையில் மாகாண சபைத் தேர்தல் இழுத்தடிக்காமல் நடைபெற வேண்டும் என்பதைத் தமது கட்சியின் வலியுறுத்துவதாக இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல் | Indian Fm Jaishankar Meets Tamil Political Leaders

பேரிடர் மீட்பு நிவாரணப் பணிகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ்த் தலைவர்களிடம் வினாவினார்.

நாட்டில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி சபைகளும் இருக்கின்ற அதே சமயம், அவற்றை புறமொதுக்கி, 'பிரஜாசக்தி' போன்ற வேறு கட்டமைப்புகள் மூலம் இந்த நிவாரணப் பணிகளை அரசியல்மயமாக்கி, அரசுத் தரப்பு அதில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்று தமிழ்க் கட்சித் தலைவர்கள் தெரிவித்த விடயங்களை மிக உன்னிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்வாங்கிக் கொண்டார்.

மேலதிக தகவல்-ராகேஷ்

பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் பாரிய பாதிப்பு:அச்சுறுத்தும் போராசிரியர் காமினி வீரசிங்க

பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் பாரிய பாதிப்பு:அச்சுறுத்தும் போராசிரியர் காமினி வீரசிங்க

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

GalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US