இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கடற்றொழிலாளர்கள்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் தமிழகத்துக்கு 14 பேர் கொண்ட வடபகுதி கடற்றொழிலாளர்கள் கடல் வழியாக படகு மூலம் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் ரவி, தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேச தீர்மானித்துள்ளனர்.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத்தில் இன்று (04.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மேளன தலைவரின் கருத்து
இதன்போது சம்மேளனத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், “புனித பிரகாஸ்,கடந்த முதலாம் திகதி(01.09.2023) இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்தோம்.
குறித்த மகஜர் கையளித்து 14 நாட்களுக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடில் காத்திரமான நடவடிக்கை எடுப்போம்.”என தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக 14 நாட்களுக்குள் தீர்வு காணப்படாவிடில் அடுத்து வரும் நாட்களில் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri