முகமாலையில் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நபருக்கு நேர்ந்துள்ள கதி
கிளிநொச்சி - முகமாலையில் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 31ஆம் திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஆணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (03.09.2023) பிற்பகல் 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த யதீஸ்குமார் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு
இச்சம்பவம் குறித்து இரு சந்தேகபர்கள் நேற்று பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முகமாலை பகுதியையும் மற்றையவர் யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியையும் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகபர்களை இன்று (04.09.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது செப்டெம்பர் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
