தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி மு.க.ஸ்டாலினிடம் இருந்து பறந்த கடிதம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரிடம், தமிழக முதல்வரின் கடிதம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.
இணை அமைச்சர் முரளிதரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தினை திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் நேரில் சென்று வழங்கினார்கள்.
கோரிக்கை
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரி இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும். பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளைத் திரும்ப வழங்கிடுமாறும் இந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை ஒன்றிய அரசு விரைந்து காண வேண்டுமென்றும் தமிழக முதல்வரின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam