நெடுந்தீவுக்கு அருகில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் கைது (Video)
இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை நெடுந்தீவுக்கு தெற்கில் டோலர் படகுடன் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்கடையின் வடக்கு கட்டளை தலைமையகத்தின் படையினர், அதிவேக படகில் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர்.
இவர்கள் சல்வதேச கடல் எல்லையை மீறி நெடுந்தீவுக்கு தெற்கில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.


ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam