மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்
மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(08.03.2025) இடம்பெற்றுள்ளது.
பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை உடனடியாக தாழ்வுபாடு கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
தாழ்வுபாடு கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை காலை கடற்றொழிலாளர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதன்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகள் மன்னாருக்கு வருகை தந்து கடற்றொழிலாளர்களை பார்வையிட்டதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் கடற்றொழிலாளர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 42 நிமிடங்கள் முன்

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri
