நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
யாழ். நெடுந்தீவுக்கு அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 23 இந்திய கடற்றொழிலாளர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
விளக்கமறியல்
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து நீரியல்வள திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டனர்.
பின்னர் 23 கடற்றொழிலாளர்களும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள
திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி: கஜிந்தன்
முதலாம் இணைப்பு
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (03.02.2024) குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகுகளையும் அதிலிருந்த 23 கடற்றொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
மேலும், கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து, விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் சுதந்திரம் நசுக்கப்படும் போது போராட்டங்கள் தவிர்க்க முடியாததாகின்றது: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |