இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டு கைதான 15 தமிழக மீனவர்களையும் ஜுலை 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் நேற்று(09) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களும் அவர்கள் பயணித்த இரு படகுகளும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது15 மீனவர்களையும் ஜுலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருமணத்துக்கு பின்னும் கிளாமரில் வெளுத்து வாங்கும் கீர்த்தி சுரேஷ் ... வைரலாகும் புகைப்படங்கள் Manithan
