இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் இந்திய நிதியமைச்சர்
இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி இவர் இன்று (01.11.2023) இலங்கை வந்தடையவுள்ளார்.
இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வந்ததன் 200வது ஆண்டு விழாவான “நாம் 200” நிகழ்ச்சியில் நிதியமைச்சர் முக்கிய உரையை ஆற்ற உள்ளதாகவும் கொழும்பில் நடைபெறும் இந்தியா-இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டின் போது அவர் உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் SBI வங்கி கிளைகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விஜயத்தின் போது லங்கா ஐஓசி எண்ணெய் தொட்டிகள், யாழ்ப்பாணம் கலாச்சார மையம் மற்றும் யாழ்.பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.