இந்திய தூதரக தலைமை அதிகாரி ராம் மகேஷ் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு விஜயம்
இந்திய தூதரக தலைமை அதிகாரி ராம் மகேஷ் நீண்டகாலமாக இயங்காதநிலையில் காணப்படும் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த ஓட்டுத்தொழிற்சாலைக்கு அவர் நேற்று(11.10.2024) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை
இந்நிலையில், நீண்டகாலமாக இயங்காது காணப்படும் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையினை விரைவாக மீள இயங்கச்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியத் தூதரக தலைமை அதிகாரியிடம் மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.
மேலும், அந்த ஓட்டுத்தொழிற்சாலையினை மீள இயங்கச் செய்வதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடியதாக இருக்குமெனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், இந்த கண்காணிப்பு விஜயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.எம்.எம் பாரிஸும் கலந்துகொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
